Author: அருள்

எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம்? பரபர ஆலோசனையில் தினகரன்

சென்னை: தம் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயும் என்பதால் தினகரன் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தரப்பு – தினகரன் அணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத்தை முடக்கியது போல தம் மீதும் வழக்குகள் பாயலாம்; […]

அமைச்சர் ஜெயக்குமார்

‘தினகரன் ஒரு திருடன்’: ஜெயகுமார் ஆவேசம்

சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேட்டி: ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’ என்ற பழமொழி, தமிழக மக்களுக்கு தெரியும். இதற்கு, மதில் ஏறி திருட வந்தவன், மக்களை பார்த்ததும், தான் திருடன் இல்லை எனக்காட்ட, தோளில் கிடந்த உடும்பை காட்டி, வித்தை காட்டினானாம். அது போன்றவர் தினகரன். […]

ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம்

‘ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொதுகூட்டத்தில், ‘தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்’ என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, ‘தினகரன் கதை, […]

இம்மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி காலி

திண்டிவனம்: ”18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதன் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., (அம்மா) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்ற தினகரனுக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் அணியில் 21 எம்.எல்.ஏ.,க்கள் […]

கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

சென்னை : மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி, விமர்சித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக அவர் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார். தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர். பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர். தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா? மோடி அரசுக்கு எதிராக கீழடி […]

கைது செய்ய செந்தில் பாலாஜியை தேடும் தமிழக போலீஸ்

குடகு : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள கர்நாடகா மாநிலம், குடகு சொகு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அவர்கள் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் […]

கமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தனி கட்சி துவங்குவதற்காக அதிக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ரசிகர்களும் இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். கமல் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை இப்பொழுதே கற்பனை செய்து விட்டார்கள் ரசிகர்கள். அதன் வெளிப்பாடாக தற்போது கமல்ஹாசனின் அமைச்சரவை என ஒரு கற்பனை புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் இருக்கும் […]

பிக்பாஸ்ல இருந்து நிலாவுக்கா போறாங்க.. எதுக்கு இந்த அழுகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. இந்த வாரம் வையாபுரி தான் வெளியேறினார். எவிக்‌ஷன் முடிந்து வெளியே போகும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன்னுடைய கருத்து சொல்றவங்க நடிகை ஸ்ரீ பிரியா. இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஏன் எவிக்ட் ஆன அழறாங்குனு புரியல. அவங்க நிலாவுக்கா நேரா போறாங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்யும் மீண்டும் சந்திக்க […]

சுஜாவின் காதலர் யார் தெரியுமா? பிக்பாஸில் வெளிப்படுத்திய சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதில் பலர் எலிமினேட் ஆகி தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைந்த கமல்ஹாசன் மீண்டும் வெளியேறும் போது, சுஜா அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது அவர் முன்பு ஜோக்கர் குல்லா அணிந்து, தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்றும் கூறினார். கமலும் கேமராவைப்பார்த்து சிவக்குமாருக்கு […]

மீண்டும் வறட்சி ஏற்படலாம்! நிபுணர்கள் எச்சரிக்கை!! – ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளிலும் பெய்துவந்த மழை படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் வறட்சியான காலநிலையொன்று ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கை வானிலை அவதானத் திணைக்களத்தின் நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகள் விசேடமாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வறட்சி ஏற்படலாம் […]