Author: அருள்

யாழ்பாணம் திட்டமிட்டு சிதைக்கபடுகிறதா? தொடரும் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் சென்ற வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 8.30 மணி அளவில், மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான […]

வவுனியாவில் கடையை உடைத்து பணம் திருட்டு

வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள சில்லறை கடையை இரவு இனம்தெரியாத நபர்களால் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தன நிலையத்தை மூடிவிட்டு இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.07.2018

மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். மிதுனம்: […]

22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளனர். குறித்த அன்னதான மடத்திற்கான உரிமையாளர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று மாலை ஆவிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை […]

எடப்பாடியை மிரட்டும் மத்திய அரசு : பின்னணி என்ன?

முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் […]

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெலிகட காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு கொழும்பு நீதவானால் வழங்கப்பட்ட ஒரு வருட சிறைதண்டனையை, உடநடியாக அமுல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டுள்ளது. சட்டதரணி ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குறித்த கொழும்பு நீதவானால் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து குறித்த காவற்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் வேலணை மக்களுக்கு அவசர வேண்டுகோள்

வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலணை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. சாட்டி பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்த கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கபட படுவதால், உவர் நீர் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.07.2018

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை […]

இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! அவசர கோரிக்கை

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் […]

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர்: விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் நேற்று காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்தவர் என்றும், இது தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை […]