தனது ஆட்சியைக் காப்பாற்ற பதவிகளையும், பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கொள்வனவு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு தனது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்குமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனினால் முன்மொழியப்பட்ட, மட்டக்களப்பு ஐயங்கேணி பாடசாலை […]
Author: அருள்
ரணில் – மைத்திரி ஆலோசனை!
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்த்து, அமைச்சரவையில் 30 பேரை நியமிக்கலாமென பிரதமர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகரிக்கக் கூடாதென்பதில் ஜனாதிபதி மைத்திரி உறுதியாக உள்ளார். எனினும், அதுதொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்று […]
தமிழர் பகுதியை நோக்கி மைத்திரி அவசர உத்தரவு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இவ்வாறு அவசர உத்தரவு விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் வடக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக 9 பிரதேச செயலகங்களில் 2,788 குடும்பங்கள் […]
இன்றைய ராசிபலன் 23.12.2018
மேஷம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்பக்கபலமாக இருப்பார்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். பாதியில் நின்றவேலைகள் முடிவடையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங் […]
சுவை மிகுந்த பருப்பு உருண்டைக் குழம்பு செய்ய…!
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – முக்கால் கப் துவரம்பருப்பு – கால் கப் சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு வெங்காயம் – 2 உப்பு – தேவையான அளவு. தயார் நிலையில் வைக்க வேண்டியவை: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, புளி – […]
மகிந்தவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சிபாரிசு
எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், “நாம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதற்கேற்றவாறு தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆகையால்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை […]
பதவியை கையளிப்பதே சம்பந்தனுக்கு மதிப்பு! மகிந்த
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பான்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது. அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதேசிறந்ததாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் […]
ஆசிரியர் ஒருவரை தேடி பொலிஸார் வலைவீச்சு
வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் இரு அதிபர்கள் ஆகியோரின் போலி கையொப்பங்களுடனும் போலி அரச இறப்பர் இலச்சினைகளுடனும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச வங்கியொன்றில் பதின்மூன்று இலட்சம் ரூபா கடன்பெற்று தலைமறைவாகியிருக்கும் ஆசிரியர் ஒருவரைத் தேடி மொனராகலைவிசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் வலை விரித்துள்ளனர். வெள்ளவாய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. ரட்ணசிரி மொனராகலை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட […]
நீரில் மூழ்கிய முல்லைத்தீவு மாங்குளம் பகுதி!
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மழை வெள்ள அனர்த்தம் மாங்குளம் நகர் துணுக்காய் வீதி, கல்குவாரி , நீதிபுரம் போன்ற இடங்கள் நீரில் மூழ்கின. ஆகையால் மக்கள் இதில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மேலும் கடைகள் வீடுகளுக்குள் நீர்த்தேக்கம் கால்நடைகளும் இறப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடையவைத்துள்ளது.
தொண்டமானாறு தடுப்பணை தற்போது திறப்பு
வடமராட்சி நன்னீர் ஏரியிலுள்ள தொண்டமானாறு தடுப்பனை தற்போது திறக்கப்பட்டுள்ளது.





