முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை, எவ்வித ஆட்சேபனைகளும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடிக்கு மிகவும் அவசியமான உள்ள வெளிச்சவீட்டை அமைத்துத் தருமாறு யுத்தம் நிறைவடைந்து 8 வருட காலமாக மீனவ சமுதாயம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென ரவிகரன் சபையில் குறிப்பிட்டார்.

இதனால் சுமார் 5 ஆயிரம் மீனவக் குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ள ரவிகரன், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் இதற்கு விரைந்து தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *