ஊழல்களை மறைக்கவே ராஜபக்சர்கள் தொழிற்சங்கங்களை தூண்டி விடுகின்றனர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊழல் முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டோரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளது. இவர்களை தற்பொழுது கைதுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் எரிபொருள் ஊழியர்கள் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

தம்மை கைது செய்யவேண்டாம் என பௌத்த பிக்குமார் மூலமாக செய்திகளை அனுப்புகின்றனர். இதன்பெறுபேறுகளே இவ்வாறான வேலைநிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

அரசாங்கத்தையும் நாட்டையும் சீர்குலைக்க இவர்கள் செயற்படுகின்றனர். அரசாங்கம் என்றால் அரசாங்கம் என்ற ரீதியில் செயற்படவேண்டும். அதனையே நான் விரும்புகின்றேன் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தலையிட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மட்டத்திற்கும் அப்பால் அரசாங்க தலைவர் தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டரை வருட காலமாக நாட்டை சீர்குலைத்து அராங்கத்தை வீழ்த்தும் முயற்சியிலேயே ஈடுபட்டனர்.

இவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்தால் நாம் அரசாங்கத்தை பாதுகாப்போம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *