யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது நீதிபதியின் உயிரைப் பாதுகாத்து தன்னுயிரைத் துறந்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவுக்கு நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழத்தில் அனைத்துப்பீட மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.