போரினால் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த இலங்கைத் தமிழர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடியா குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் பொறுப்புக் கூறலானது அவசியம் என ஜஸ்ட்டின் வலியுருத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டிய அவர் இன்றும் கனேடிய மக்கள் கறுப்பு ஜுலையினை நினைவு கூறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த சர்வதேசம் காட்டும் முனைப்பினை கனடா வரவேற்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள ஜஸ்ட்டின் போரினால் பாதிப்படைந்த மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அவை அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





