Tuesday , August 26 2025
Home / முக்கிய செய்திகள் / துப்பாக்கி பிரயோகம்  நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல :  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

துப்பாக்கி பிரயோகம்  நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல :  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

யாழ். நல்லூர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் இந்தச் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை. விசாரணைகளின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv