தலைமன்னாருக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (திஙகட்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் ரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *