வவுனியாவில் உணவக உரிமையாளர்களுக்கான கருத்தரங்கு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஓவியா விருந்தினர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

வட. மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நடத்தும் இக் கருத்தரங்கில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அதனை கையாளும் விதிமுறைகள் தொடர்பாகவும், சுகாதாரம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.

அடுத்து வரும் 13 ஆம் திகதி மில் ஆலைகள், அரிசிமா தயாரிப்பு உரிமையாளர்களுக்கும், 14 ஆம்திகதி பேக்கரி, ஜாம் பழரசம் மற்றும் ஐஸ்கிறீம் தயாரிப்பாளர்களுக்கும் இச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், உதவிப் பிரதேச செயலாளர் சாரதா, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி வி.பசுபதிராஜா, வைத்திய கலாநிதி மகேந்திரன், சுகாதார திணைக்கள அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *