பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமைகள் இல்லை: சுமனரத்ன தேரர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தமிழ் மக்களை அடக்கியாள சில சக்திகள் திரைமறைவில் முயல்வதாக தெரிவித்த சுமனரத்ன தேரர், தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதென்றும், தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிறகடிக்காமல், தமிழினத்திற்கு வாக்களித்து கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, யுத்த காலத்தைவிட யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் காடுகள், ஒலைக்குடிசைகள் என்பவற்றில் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ள தேரர், இந்நிலைமையை மாற்றியமைக்க தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு கிழக்கை காப்பாற்ற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *