சரத் வீரசேகரவின் மனு குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவர் மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதுகுறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியமை மற்றும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியமை போன்ற விடயங்களில், தாம் பயங்கரவாதத்திற்கு எதராகவே செயற்பட்டதாக ஐ.நா. ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் சட்ட சங்கத்தில் அவர் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றிக்கு மனித உரிமைகள் தொடர்பான சட்டம் நீக்கப்பட வேண்டுமென அண்மையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டதை இதன்போது சுட்டிக்காட்டிய ஐ.நா. ஆணையாளர், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏன் இவ்வாறு இலக்கு வைத்து தாக்கப்படுகின்றதெனவும் எதற்காக சிலர் இச் சட்டத்திற்கு பயப்படுகின்றார்கள் எனவும் வினா எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஒவ்வொரு நாடும் மனித உரிமைகளை அடிப்படையாக ஏற்றுக்கொள்வதே பொருளாதார அபிவிருத்திக்கும் நிலையான சமாதானத்திற்கும் வழிவகுக்குமென குறிப்பிட்ட ஐ.நா. ஆணையாளர், பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள அரசாங்கங்களின் நடவடிக்கைகள் துல்லியமாக இருக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *