வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை கூட்டமைப்பை பலப்படுத்தும்: யோகேஸ்வரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு மாகாணசபையில் நியாயம் நீதி நிலைக்கவேண்டும், அங்கு ஏற்படும் ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”கிழக்கு மாகாணத்தில் பல நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. விசாரணைகள் நடத்தப்படவில்லை.

முதலமைச்சர் மாநாடு நடத்தியதில் நிதி, ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வுக்குரிய நிதி, மோசடி தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டு அதற்கான நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை.

கிழக்கு மாகாண சபையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் பல தவறுகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் நிதி, ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை என நாங்கள் பிரச்சாரம் செய்ய முற்படவில்லை.

தற்போது வடக்கில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை நீங்கி நல்லதொரு ஆரோக்கியமான செயற்பாட்டிற்காக வழமைபோல் நிர்வாக கட்டமைப்பு முன்வரவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணசபையில் நியாயம் நீதி நிலைக்கவேண்டும், அங்கு ஏற்படும் ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *