Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்

ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்

“நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதித்திருக்கவேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து செயலாற்றமுடியாமல் உள்ளது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது அதிக அன்புகொண்டவன். அந்தக் கட்சியைப் பலவீனமடையச் செய்வதற்காக நான் மஹிந்த தரப்புடன் இணையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்ததால் அந்தக் கட்சியை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காகவே நான் மஹிந்த அணியில் இணைந்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி அமைத்தமையானது சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் ஒருபோதும் சுதந்திரக் கட்சியின் கொள்கை ஒத்துப்போகாது. அவ்வாறு ஒத்துப்போனால் சுதந்திரக் கட்சி அழிந்துவிடும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால அனுமதித்திருக்க வேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என்று சுதந்திரக் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தலதா மாளிகையில் வைத்துக் கூறிவிட்டு பின்னர் மாறிவிட்டனர். இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கேற்ப ஜனாதிபதி சுதந்திரக் கட்சியை நிர்வகிக்கின்றார்.

ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இவ்வாறான மோசமான பயணத்தில் ஈடுபட்டிருப்பதால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து செயற்படமுடியாமல் உள்ளது. அவரது இந்தப் பயணம் தொடரும்வரை எமது இணைவு சாத்தியமே இல்லை” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …