மட்டக்களப்பில் கடும் வரட்சி காரணமாக சிறுபோக செய்கைகள் பாதிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் சிறுபோகச் செய்கைகள் பாதிப்படைவதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

குளங்களின் நீர்மட்டம் குறைவடைவதால் சிறுபோக நெற்செய்கைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இம்முறை சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உன்னிச்சை, உறுகாமம், நவகிரி ஆகிய பாரிய குளங்களினதும் புளுக்குணாவ, கடுக்காமுனை, வாகனேரி உட்பட நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களினதும் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் பிரதி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் குளங்களின் நீரை நம்பியே சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *