கீதா குமாரசிங்க விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனு இன்று (திங்கட்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுவின் மீதான விசாரணை நிறைவடையும் வரை இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரது உறுப்புரிமை இரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனுவின் பிரகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இன்றைய தினம் வரை இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *