மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் நாட்களான மே 19 முதல் மே 21 வரையான நாள்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றின் ஏழாவது அமர்வு இதே நகரில் கூடவுள்ளது.

உலகின் பல பாகங்களிலுமிருந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனற் சபை உறுப்பினர்களும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவற்றை கையாள்வதற்கு பாவிக்க வேண்டிய உத்திகள் பற்றியும் விவாதிப்பர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக – மக்கள் தொடர்பாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *