Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசமைப்பில் தமது நிலைப்பாட்டில் அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி!

அரசமைப்பில் தமது நிலைப்பாட்டில் அழுத்தம் கொடுக்கிறது மஹிந்த அணி!

அரசமைப்புத் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவோம் என்று பொது எதிரணியான மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு, இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 3 ஆம்திகதி இடைக்கால அறிக்கையின் வரைபு, வழிநடத்தல் குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரைவு மீதான கருத்துக்களை, வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி முன்வைப்பார்கள்.

“ஏற்கனவே இது போன்ற இடைக்கால அறிக்கைகள் தரப்பட்டபோது, அதில் பல விடயங்களை நாங்கள் நிராகரித்துள்ளோம். அவை தற்போது தரப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்குமானால் இந்த அறிக்கையையும் நிராகரிப்போம். நாம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்படாவிட்டால், வழி நடத்தல் குழுவிலிருந்து வெளியேற நேரிடும்” என்று மஹிந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக, வழிநடத்தல் குழுவின் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை நான்கு நாட்களில் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …