Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!

குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!

குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!

குளவிகள் தாக்கும் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, சென் லூசியஸ் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் வளாகத்திலுள்ள மரமொன்றில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கல் தாக்குதல் காரணமாக குளவிக் கூடொன்று கலைந்துள்ளது. இதையடுத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் குளவிகள் கொட்டியுள்ளன.

மறுநாள் சனிக்கிழமையன்று கொழும்பு மாநகர சபையிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். அன்றைய தினமும் குளவி கொட்டியுள்ளது. இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள்தான் வந்து கூடுகளை அகற்ற வேண்டும் எனக் கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

வழமைபோல் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை கூடியது. காலைக் கூட்டம் நடைபெறும்போது அப்பகுதிகளைச் சூழ குளவிகள் ரீங்காரமிட்டு திரிந்துள்ளன. இதனால், அவை கொட்டிவிடும் என்ற அச்சத்தில் காலைக் கூட்டம் முடிவடைந்த கையோடு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …