முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவிலிருந்து 50 பேர் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் 42 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 பேரை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த 50 பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கும் நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அதற்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த மே தினக் கூட்டத்தின் பின்னர், மஹிந்தவை மைத்திரியுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.