Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்

சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்

“படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது.

– இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இறுதிப் போரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரடியாகப் படையினரிடம் கையளிக்கப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். பொறுப்புள்ள அரசு என்ற வகையில் இவர்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இனிமேலும் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படக்கூடாது. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களை கேலிக்கூத்தாகவும் பார்க்கக்கூடாது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்களை நல்லாட்சி அரசு திறக்க வேண்டும். இதன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க முடியும்.

மேலும், இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு நிச்சயமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv