முள்ளிக்குளம் மக்களின் காணி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் நேரில் சென்று ஆராய்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) முள்ளிக்குளம் கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ள நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முள்ளிக்குளம் மக்கள் அனைவரையும் தங்களிடம் முள்ளிக்குளம் காணி தொடர்பாக உள்ள சகல விதமான ஆவணங்களின் பிரதிகளுடன் முள்ளிக்குளம் ஆலயத்திற்கு வருகை தருமாறு முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் போது முசலி பிரதேச செயலக காணி பிரிவு அதிகாரிகள்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய பிரதி நிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் விரிவாக கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் முள்ளிக்குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடங்களை பார்வையிட்டதோடு,கடற்படையினர் வசமுள்ள மிகுதியான மக்களின் காணிகள் மற்றும் அரச காணிகளையும் பார்வையிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *