அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம்என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் ஆட்சிமாற்றம் பின்னர் நாட்டின் வேலையின்னை மற்றும் கடன் சுமையில் இருந்து விடுப்பட ஒரு செயற்றிட்டத்தை அமைக்க ஒரு வருட காலத்தை கோரினோம். காரணம் முன்னாள் அரசு பெற்றுக்கொண்ட கடன்களால் எமது பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்தால் நாம் ஒருபோதும் மீண்டெழ முடியாது.
2018ஆம் ஆண்டு நாம் 96ஆயிரம் கோடி கடனை செலுத்த வேண்டியுள்ளது. 2020 ஆண்டு விசேட கடன் அடிப்படையில் 1500 கோடி டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. கடன் சுமையை மக்கள் மீது விதிக்காது அதனை செலுத்த வேண்டும் என்பதுடன், நாட்டின் அபிவிருத்திப் பணியையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்கவும், இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். நாட்டின் ஏற்றுமதி வருவானத்தை அதிகரிக்க வேண்டும்.
சர்வதேச உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இன்று எமது நாட்டை நோக்கி பாரிய மூலதனங்கள் வருகின்றன. மக்கள் மீது கடனை சுமத்தாது நாங்கள் இந்த நாட்டை அபிவிருத்திச் செய்ய பார்க்கின்றோம். வேலைவாய்ப்பை தேடி கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றோம். ஏன் அங்கு ஏற்றுமதி பொருளாராம் உள்ளது. அங்குள்ள மூலதனத்தை இங்கு கொண்டுவர வேண்டும்.
இந்து சமுத்திரத்தில் வர்த்தக மத்திய நிலையமாக நாம் மாற வேண்டும். துறைமுகங்கள் மற்றும் சர்வதேச கடல்மார்க்கத்தின் மத்தியஸ்தமாக இலங்கை உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டுதான் இந்ந நாட்டின் தொழில்துறையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றார்.