நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது தவறி விழுந்து மலையேறும் வீரர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நேபாளத்தில் நேற்று காலை நப்ட்ஸ் பகுதி வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் தவறிவிழுந்து பலியானார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மலையேறும் வீரர் யுயெலி ஸ்டெக் (40). நேற்று காலை இவர் நேபாளத்தில் உள்ள நப்ட்ஸ் பகுதி வழியாக இமய மலையின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

அப்போது அவரது கை தவறிவிட்டது. இதனால் அவர் மிக ஆழமான பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான ஸ்டெக் மலையேறுவதில் நிபுணராக திகழ்ந்தார். இவரை சுவிஸ் மெஷின் என செல்லமாக அழைப்பார்கள். மிக விரைவாக கயிறு இன்றி மலை ஏறுவார்.
இவர் ஆல்ப்ஸ் மலை சிகரமான எய்ஜரில் 2 மணி 47 நிமிடங்களில் கயிறு இன்றி ஏறி சாதனை படைத்தார். 2012-ம் ஆண்டில் ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.

2015-ம் ஆண்டில் ஆல்பின் மலையில் 13,100 அடி உயரத்தில் உள்ள 82 சிகரங்களை 62 நாட்களில் ஏறி முடித்தார்.

இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான மலையேறும் சீசனில் பலியான முதல் வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *