போராட்டங்களுக்கு தீர்வாக மே தினம் அமையவேண்டும்: சம்பந்தன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

”தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும், தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

”சர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றிக்கு வரவேற்பினை பெற்றுக் கொடுப்பதற்கும், உலகவாழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தியாகங்களைச் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சந்தர்ப்பமாகும்.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியின் பொருட்டு தமது சக்தியை ஈடுபடுத்தி சேவையாற்றிய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எமது நாடானது தற்போது வரலாற்றிலே ஒரு முக்கிய கட்டத்தினை அடைந்துள்ளது. எனவே, தேசிய அபிவிருத்திக்காக சிறப்புடன் பணியாற்றும் அதேவேளை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பவற்றினை அடைந்துகொள்வதற்காக உணர்ச்சிபூர்வமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறும் தொழிலாளர் வர்க்கத்திடம் வேண்டிக்கொள்ள விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *