தமிழ் மக்கள் பேரவையினரால் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில் மேற்படி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.