இனங்காணாத நோய்த்தொற்றினால் திருகோணமலையில் மூவர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இனங்காணப்படாத நோய் தொற்று காரணமாக திருகோணமலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

டெங்கு நோய் காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் இன்புளுவென்சா எச்1 என்1 எனும் நோய்த்தொற்றினால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – சிறிமாபுற பகுதியில் வசித்து வந்த எச்.ஹேவாவித்தாறன எனும் 58 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12 ஆம்திகதி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக குறித்த நபர் அருகிலிருந்த தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காததன் காரணமாக கடந்த 15 ஆம் திகதி திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்களுக்கு இவ்வாறான நோய்த்தொற்று குறித்த தெளிவின்மையால் இறுதிச் சடங்கிற்குக் கூட உறவினர்களைத் தவிர்த்த வேறு எவரும் வருகைதரவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *