Thursday , August 21 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதனால் பதுளை, மாத்தறை, மதுகம, அதுருகிரிய, பலிஅத்த, உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இயந்திரம் செயலிழந்தமைக்கான காணம் கண்டறியப்படாத நிலையில், செயலிழந்துள்ள இயந்திரத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் இதுவரை 30 தடவைகள் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …