சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள கையாங் மாகாணத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் பலியாகினர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் 10 பயணிகள் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் போக்குவரத்து விதிமுறைகள் அதிகமாக மீறப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் அங்கு அடிக்கடி நடைபெறுகின்றன.