மீதொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமுற்றோருக்காக தான் வேண்டுவதுடன், அவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஒற்றுமையை வெளிக்காட்ட முன்வருமாறும் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *