காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன.
வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது.
கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணியில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவுகளை நேரில் வழங்கி வருகின்றனர். ஆனால், நீதிக்கான இந்தப் போராட்டங்கள் தொடர்பில் அரசோ பராமுகமாகவே இருக்கின்றது.