Monday , October 20 2025
Home / முக்கிய செய்திகள் / வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறை ஊறணிப் பகுதியிலுள்ள சுமார் 28.2 ஏக்கர் மக்கள் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பிரதேசத்தினை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராடி வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 28.2 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட குறித்த பகுதிளில் உள்ள கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்ற நிலையில், குறித்த காணிகளின் எல்லைப்பரப்புக்களை அடையாளம் காண்பதில் அப்பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 27 ஆண்டுகளின் பின்னர் குறித்த 28 காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv