விமலுக்கு பிணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு 87 நாட்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பல முறை பிணை கோரியிருந்த போதிலும் அவருக்கான பிணையை வழங்க நீதிமன்றம் நிராகரித்துவந்தது.

இதனால் அவர் உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் முன்னெடுத்ததோடு 8 நாட்களின் பின்னர் அப்போராட்டத்தையும் கைவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விமல் வீரவன்ச அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பு கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஐயாயிரம் ரூபா பெறுமதியான ரொக்கமும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதியளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *