ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில், தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 மெட்ரோ ரெயில் பெட்டிகளில் நேற்று குண்டுகள் வெடித்தன. கேட்பார் இன்றி கிடந்த பொருட்களில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாகி இருந்ததாக பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.