Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்

சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்

சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் தெளிவு படுத்தியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …