நாளை உருவாகும் புதிய கூட்டணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நாளை உருவாகும் புதிய கூட்டணி

முன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.

ரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள்.

இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன.

குறித்த விடயங்களை இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் அறிவித்தார்.

அங்குஅவர் மேலும் தெரிவிக்கையில்,

புதியதோர் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கில் பல கட்சிகளை இணைத்து உடன்பாட்டை தயாரித்துள்ள நிலையில் அதில் சில கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் எட்டப்படாத நிலைமையும் இருக்கின்றது.

எனினும் தற்போது நான்குகட்சிகளிடத்தே உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றன.

இந்தக் கூட்டணியின் அரசியல் குழுவில் கட்சிகள் பலவும் சமஉரிமை கேட்கின்றனர்.

குறிப்பாக அனந்தி சசிதரன் மற்றும் ஐங்கரநேசன் போன்றவர்கள் அரசியல் உயர் குழுவில் சமஉரிமை கேட்கின்றனர். ஆனாலும் அனந்தி சசிதரன் அவற்றைத் தீர்த்துக் கொண்டு கூட்டணியில் இணைந்து செயற்பட இருக்கின்றார். ஆனால் ஐங்கரநேசன் இந்தச் கூட்டணியில் இணையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளவில்லை.

ஆகையினால் தற்போது நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்றபெயரில் புதியதோர் கூட்டடை உருவாக்கியுள்ள நிலையில் நாளை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து கூட்டணியின் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்லதாகவும் அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News