ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா-கிஸ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலச்சரிவு குறித்து போலீஸ் உயரதிகாரி சந்தீப் வான்சீர் கூறுகையில் “டிராப்ஷலா என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முயன்றபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். ஒரு மாத பெண் குழந்தை உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் குழந்தை இறந்தது. மற்ற நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.