பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ
சுமை தூக்கும் டாஸ்க்கில் கவினை ஏமாற்றி முகென் ஜெயித்து விட்டதாக கவின் ஆர்மியினர் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.
பினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், இனி டாஸ்க்குகள் கடுமையாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரடியாக பினாலேவுக்குச் செல்ல, இந்த டிக்கெட்டைப் பெற போட்டியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் கவின், நேற்று நடந்த சுமை தூக்கும் டாஸ்க்கில் தான் முதன்முறையாக சிறப்பாக விளையாடி பாராட்டுக்களைப் பெற்றார். ஆனால், அவரது வெற்றியை முகென் கோல்மால் செய்து தட்டிப்பறித்து விட்டதாக ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே காதல் சர்ச்சைகளில் சிக்குவது மட்டும் தான் கவினின் ஒரே வேலையாக இருந்து வருகிறது. மற்றபடி இதுவரையிலும் அவர் வேறு எந்த டாஸ்க்குகளிலும் சிறப்பாக விளையாடவில்லை. கடந்த வாரம் இதனை அவரது நண்பர் பிரதீப் ‘அடித்து’க் கூறிவிட்டுச் சென்றார்.
இதனால் டாஸ்க்குகளில் ஆவேசமாக விளையாடத் தொடங்கி விட்டார் கவின். அதனை நேற்று எடை தூக்கும் டாஸ்க்கில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. தர்ஷன், சாண்டி போன்றோரே தங்களால் முடியவில்லை என வெளியேறிவிட்ட நிலையில், தொடர்ந்து போராடினார் கவின்.
கவின், லாஸ்லியா மற்றும் முகென் நீண்ட நேரம் எடையைத் தூக்கியபடி நின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில் லாஸ்லியாவும் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால், கவினுக்கும், முகெனுக்கும் நேரடி போட்டி உருவானது.
இறுதியில் 30 விநாடிகள் வித்தியாசத்தில் கவினை முகென் வீழ்த்தி வெற்றி பெற்றார். தன்னால் இயன்ற வரை போராடி, நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த கவினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இதுவரை கவினை பாராட்டாத சேரன்கூட நேற்று பாராட்டினார்.
ஆனால், கவின் மற்றும் சகபோட்டியாளர்களை ஏமாற்றித்தான் முகென் இந்த வெற்றியைப் பெற்றதாக கவின் ஆர்மியினர் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெறும் காலால் மட்டும் அந்தக் கட்டையை பேலன்ஸ் செய்கின்றனர். முகெனோ தனது இடது கையால், இடது காலுக்கு தனியாக பேலன்ஸ் தருகிறார்
இதன் மூலம்தான் பிக் பாஸ் கொடுத்த நேரம் முழுவதும் அவரால் தள்ளாட்டம் இல்லாமல் நிற்க முடிந்தது என கவின் ஆர்மியினர் கூறி வருகின்றனர். அதோடு இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது மூலம், ஏறக்குறைய டிக்கெட் டு பினாலே பெறுவதற்கான வாக்குகளை முகென் பெற்று விட்டார்.
எனவே முகெனுக்கு டிக்கெட் டு பினாலே தரக்கூடாது என்றும், கமல் இந்தக் குறும்படத்தை ஒளிபரப்பி கவினுக்கு நியாயம் வாங்கித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு இனி யாரும் கவின் காலை கிண்டல் செய்யக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
vote online to save your favourite contestants today!