Sunday , November 17 2024
Home / சமையல் குறிப்புகள் / ருசியான மட்டன் கீமா குழம்பு !

ருசியான மட்டன் கீமா குழம்பு !

மட்டன் கீமா குழம்பு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

 

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு


எப்படிச் செய்வது?

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் கீமாவை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

கழுவி மட்டம் கீமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்த பின் மீதமுள்ள மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும் அதில் ஊற வைத்த கீமா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான மட்டன் கீமா குழம்பு தயார்.

 

Tamil News

 

 

 

 

Technology News

 

 

 

 

World Newspapers

Check Also

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் …