Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா!

கொழும்பு தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா!

கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஜயம் செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில் திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க திடீரென அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

எதிர்பாராத விதமாக சந்திரிகா நுளைந்ததால் அங்கு இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் திகைப்படைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தால் மைத்திரி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்மைக்காலமாக மகிந்தவுடன் நல் உறவை பேனிவரும் மைத்திரி சந்திரிகாவிடம் கதைப்பது மற்றும் சந்திப்பதில் இருந்து சற்று விலகி இருந்தமை குறிப்பிடத் தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv