மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் இன்று அவர் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.
பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது.
இன்று அவர் வவுனியா மருத்துவமனையில் இரண்டாவது சுகா தாரத் துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கவுள்ளார்.
அதோடு நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ள இலகுக் கடன் உதவியில் அமைக்கப்பட வுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்ட வுள்ளார்.
இந்நிலையில் பிரதமரின் விஜயத்தையிட்டு வவுனியா மருத்துவனைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலை யங்களின் தகவல்கள் மற்றும் உரிமையாளர்கள் , பணிபுரிபவர்களது தகவல்களை பொலிஸார் திரட்டியிருந்தனர்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள்தோடு, அங்கும் பல அபிவிருத்தித் திட்டங் களை ஆரம்பிக்கவுள் ளார்.
அத்துடன் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தைத் மக் களுடைய பாவனைக்குக் பிரதமர் கையளிப்பதோடு, இந்திய நிதியுதவில் அமைக்கப் பட்டுவரும் யாழ்ப்பாணக் கலாசார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.