Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்

அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது.

அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது தொழிற்சாலைகளின் ஏலம் உட்பட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபட்டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv