நேரத்தை அதிகரிக்க கோரும் மஹிந்த

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு நேரத்தை அதிகரிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அன்றைய தினம் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை இடம்பெறுவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தை 01.00 மணி முதல் 07.30 மணி வரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கையை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.