அமெரிக்கா பறந்தார் நிதியமைச்சர் மங்கள!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி ராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர்.

நிதியமைச்சர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.