Thursday , August 21 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை

மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை

நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றனர். இந்தப் பதாகைகள் இரவு 7 மணியளவில் நடப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் அறிந்த ஊடகவியலாளர்களும் அங்கு கூடினர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv