மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.