எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உரையுடன் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரின் உரை அமைந்திருந்தது.
இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை தொடர்பான விவாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அத்தோடு, மார்ச் 20ஆம் திகதி, இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அதன் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றை பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.
இதேவேளை ஜெனீவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.