பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் புதிய அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்களுக்கு கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்கி வருகின்றார் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் வெற்றி கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 2020 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த எதிரணியினரே ஆட்சி பொறுப்பினை ஏற்பார்கள். ஐக்கிய தேசிய கட்சியினர் பொதுவேட்பாளர் ஒருவரை வாடகைக்கு வாங்கியே போட்டியிடும் என்றார்.
பொதுஜன பெரமுன முன்னணியில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.