நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரத்தை அடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றரை வருடங்களில் ஏறத்தாழ தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருவது குறித்து தகவல்கள் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில், மஹிந்த அரசில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலக கும்பலும் தற்போது தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது.
எனினும், பாதாள உலகத்தினரை தூண்டி விடுவது மஹிந்த அணியென ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் முறையான உளவுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் பெருகி வருகின்றது.
இதற்கு குடவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒரு உதாரணமாகும்.
இதனை கட்டுப்படுத்த அத்தியாவசிய நுண்ணறிவு நடவடிக்கைகள் மற்றும் வலுவான சட்டங்கள் அவசியமாகும்.” என நாமல் அறிவுரை வழங்கியுள்ளார்.





