சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை முன்னிறுத்திய பரந்த கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தக் குட்டணி அனைத்துக் கட்சிகளை இணைத்ததாக அமைந்திருக்கும் என்றும் ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இதனை இறுதிசெய்யும் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை தேர்தலுக்கு தயாராகுமாறு இன்று காலை நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துளார்.
அதனடிப்படையில் நாடாளுமன்றைக் கலைக்கக்கூடிய நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் புதிய தேர்தல் ஒன்றுக்கான அறிவிபு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த நோக்கம் ஐக்கிய தேசிய முன்னணியினைச் சேர்ந்த பலருக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.